தொகைச் சொற்கள்
1.இரு திணை -உயர்திணை, அஃறிணை.
2. இருவினை- தன்வினை, பிறவினை.
நல்வினை, தீவினை.
3. இரு பொருள் -அகப்பொருள், புறப்பொருள்.
4. இரட்டைக் காப்பியம்-- சிலப்பதிகாரம், மணிமேகலை.
5. முத்தமிழ்- இயல், இசை, நாடகம்.
6. முக்கனி -மா, பலா, வாழை.
7.முப்பால் -அறம்,பொருள், இன்பம்.
8. மூவிடம்- தன்மை, முன்னிலை, படர்க்கை.
9. மூவேந்தர்- சேரர், சோழர், பாண்டியர்.
10. முக்காலம் - இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்.
11. மூவர்ணம் - இளஞ்சிவப்பு, வெள்ளை, பச்சை.
12. மூவுலகம் - விண்ணுலகம், மண்ணுலகம், பாதாள உலகம்.
13. முக்கடல் -வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்திய பெருங்கடல்.
14. முச்சங்கம் - முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்.
15. மும்மலம்- ஆணவம், கன்மம், மாயை.
16. நானிலம்- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்.
17. நாற்றிசை - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு.
18. நான்மறை- ரிக், யசூர், சாமம், அதர்வணம்.
19. நாற்படை - குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை காலாட்படை.
20. நாற்பா - வெண்பா ஆசிரியப்பா வஞ்சிப்பா கலிப்பா.
21. நால்வகை ஓசை - செப்பல் ஓசை, அகவல் ஓசை, தூங்கல் ஓசை, துள்ளல் ஓசை .
22. நான்கு குரவர்கள்- திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்.
23. ஐந்திணை- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.
24. ஐம்பால் - ஆண்பால், பெண்பால் ,பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.
25. ஐம்பொறி -மெய்,வாய்,மூக்கு, கண், செவி.
26. ஐம்புலன் -- தொடு உணர்வு, உண்ணல், முகர்தல், காணல், கேட்டல்.
27. ஐந்திலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி.
28. ஐம்பொன்- தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு,ஈயம்.
29. ஐம்பூதங்கள் - நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு.
30. ஐம்பெருங்குழு - அமைச்சர், புரோகிதர், படைத்தலைவர், தூதர், ஒற்றர்.
31. ஐம்பெரும் காப்பியங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.
32. அறுசுவை - இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு.
33. அறுவகைப் பருவம் - இளவேனிற் காலம், முதுவேனிற் காலம்,கார்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம் பின்பனிக்காலம்.
கருத்துகள்
கருத்துரையிடுக