TNPSC / TET / POLICE EXAM Model Tamil Question paper # 7 தமிழ் மூன்றாம் பருவம் #தமிழ் மாதிரித் தேர்வு
TNPSC / TET / GROUP- 2,2A,4
மாதிரித் தேர்வு
வகுப்பு:7
பாடம்: தமிழ் மூன்றாம் பருவம்
காலம்: 30 நிமிடங்கள் மதிப்பெண்கள்:30
1. தமிழகத்தில் நெல்லிக்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்
அ) திண்டுக்கல் ஆ) நீலகிரி இ) திருநெல்வேலி ஈ) தூத்துக்குடி
2. "கொம்பு முளைத்த குதிரை போல" இத்தொடரில் வந்துள்ள அணி
அ) எடுத்துக்காட்டு உவமையணி ஆ) இல்பொருள் உவமை அணி இ) ஏகதேச உருவக அணி ஈ) வேற்றுமை அணி
3.கலைச்சொல் தருக. Cultivation
அ) பயிரிடுதல் ஆ) நெற்பயிர் இ) வேளாண்மை ஈ) நீர்ப்பாசனம்
4. பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?
அ) நம்பியாண்டார் நம்பி ஆ) பூதத்தாழ்வார் இ) நாதமுனி ஈ) பொய்கையாழ்வார்
5.'ஜென்' என்னும் சொல் எந்த மொழிச் சொல்
அ) சீனா ஆ) ஜப்பான் இ) இலங்கை ஈ) இந்தியா
6. "வீடு முழுக்க வானம்" என்ற கவிதை நூலின் ஆசிரியர்
அ) சே.பிருந்தா ஆ) கண்ணதாசன் இ) பாவண்ணன் ஈ) நா.முத்துக்குமார்
7. "சாதிகளாலும் பேதங்களாலும் தள்ளாடும் உலகம்" என்ற வரிகள் இடம்பெற்ற நூல்
அ) இயேசு காவியம் ஆ) அறநெறிச்சாரம் இ) மகளுக்குச் சொன்ன கதை ஈ) இதய ஒலி
8.கூற்று: 1. தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் பாளையங்கோட்டையும் கிழக்குக் கரையில் திருநெல்வேலியும் அமைந்துள்ளன.
கூற்று: 2. பாளையங்கோட்டை திருநெல்வேலி ஆகிய இரு நகரங்களும் இரட்டை நகரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அ) கூற்று 1,2 சரி ஆ) கூற்று 1,சரி 2 தவறு இ) கூற்று 1 தவறு 2 சரி ஈ) கூற்று 1,2 தவறு
9.' காயிதே மில்லத்' என்னும் அரபுச் சொல்லின் பொருள்
அ) சமுதாய வழிகாட்டி ஆ) புரட்சியாளர் இ) சுற்றுலா வழிகாட்டி ஈ) கல்வியாளர்
10. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் நடந்த ஆண்டு
அ) 1962 ஆ ) 1952 இ) 1953 ஈ) 1974
11. நீர் பாய்ச்சுதல், நெல் பெறுதல், அறுவடை செய்தல், நாற்று நடுதல், போரடித்தல் - கொடுக்கப்பட்ட தொடர்களில் உழவுத்தொழிலின் செயல்பாடுகளை வரிசைப்படுத்துக.
அ) நாற்று நடுதல், போரடித்தல், அறுவடை செய்தல், நீர் பாய்ச்சுதல், நெல் பெறுதல்
ஆ) நீர் பாய்ச்சுதல்,நாற்று நடுதல், அறுவடை செய்தல், நெல் பெறுதல், போரடித்தல்
இ) நாற்று நடுதல், நீர் பாய்ச்சுதல், அறுவடை செய்தல், போரடித்தல், நெல் பெறுதல்
ஈ) நீர் பாய்ச்சுதல், நாற்று நடுதல், அறுவடை செய்தல், போரடித்தல், நெல் பெறுதல்
12. பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரம் எது
அ) கொற்கை ஆ) திருநெல்வேலி இ) மதுரை ஈ) செங்கோட்டை
13. "கொற்கையில் பெருந்துறை முத்து" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?
அ) நற்றிணை ஆ) குறுந்தொகை இ) அகநானூறு ஈ) புறநானூறு
14. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியை பாடியவர் யார்?
அ) பொய்கையாழ்வார் ஆ) பேயாழ்வார் இ) பூதத்தாழ்வார் ஈ) ஆண்டாள்
15.பொருத்துக.
i) காவடிச்சிந்து - அ) டி.கே.சிதம்பரநாதர்
ii) தமிழிசைக் காவலர் -ஆ) திரிகூடராசப்பக் கவிராயர்
iii) நுண் துளி தூங்கும் குற்றாலம் -இ) திருஞானசம்பந்தர்
iv) குற்றாலக் குறவஞ்சி -ஈ) அண்ணாமலையார்
அ) i- இ ii- அ iii- ஈ iv-ஆ
ஆ) i- ஆ ii- அ iii- ஈ iv- இ
இ) i- ஈ ii- அ iii- இ iv-ஆ
ஈ) i- ஆ ii- ஈ iii- இ iv- அ
16. தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி
அ) உவமையணி ஆ) எடுத்துக்காட்டு உவமையணி இ) இல்பொருள் உவமையணி
ஈ) ஏகதேச உருவக அணி
17. முதலாழ்வார்களுள் பொருந்தாதவர் யார்?
அ) பொய்கையாழ்வார் ஆ) பூதத்தாழ்வார் இ) பெரியாழ்வார் ஈ) பேயாழ்வார்
18. ஒப்புரவு நெறியை அறிமுகப்படுத்திய நூல் எது?
அ) அறிநெறிச்சாரம் ஆ) திருக்குறள் இ) பழமொழி நானூறு ஈ) நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்
19.பொருத்துக.
i) பொருளாகு பெயர் - அ) டிசம்பர் சூட்டினாள்.
ii) இடவாகு பெயர் - ஆ) மல்லிகை சூடினாள்.
iii) காலவாகு பெயர் - இ) தலைக்கு ஒரு பழம் கொடு
iv) சினையாகு பெயர் - ஈ) இனிப்பு தின்றான்.
v) பண்பாகுபெயர் - உ) பொங்கல் உண்டான்
vi) தொழிலாகு பெயர் - ஊ) மட்டைப்பந்து போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
அ) i- இ ii- அ iii- ஈ iv-ஆ v- ஊ vi - உ
ஆ) i- ஆ ii- ஊ iii- இ iv- ஈ v - உ vi -அ
இ) i- ஆ ii- ஊ iii- அ iv-இ v - ஈ vi - உ
ஈ) i- ஊ ii- ஈ iii- இ iv- ஆ v - அ vi -உ
20. வினைக்கு அடைமொழியாகக் குறிப்பு பொருளில் வருவது ?
அ) இரட்டைக்கிளவி ஆ) அடுக்குத் தொடர் இ) ஆகுபெயர் ஈ) வேற்றுமைத்தொகை
21. "இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர்" என்று காயிதே மில்லத் பற்றி கூறியவர் யார்?
அ) அண்ணா ஆ) பெரியார் இ) காமராசர் ஈ) இராஜாஜி
22. குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ்கள் எவை ?
அ) அருளோசை , அறிக அறிவியல் ஆ) சண்ட மாருதம், பஞ்சாமிர்தம் இ) ஊமைகளின் தலைவன், அருளோசை
ஈ) அனைத்தும் சரி
23. முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
அ )220 ஆ) 222 இ) 225 ஈ) 230
24." ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
அ) பெரியாழ்வார் ஆ) ஆண்டாள் இ) பூதத்தாழ்வார் ஈ) பொய்கையாழ்வார்
25. உலகம் உண்ண உண; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர் யார்?
அ) பாரதிதாசன் ஆ) பாரதியார் இ) முடியரசன் ஈ) கண்ணதாசன்
26. பாவண்ணன் எழுதிய நூல் எது?
அ) மலை அருவி ஆ) குறட்செல்வம் இ) மீசைக்கார பூனை ஈ) மலைப்பொழிவு
27. அடுக்குத் தொடரில் ஒரே சொல் எத்தனை முறை வரை அடுக்கி வரும்?
அ) இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து
28. பொருளின் பெயர் அதன் சினையாகிய உறுப்புக்கு ஆகி வருவது
அ) சினையாகுபெயர் ஆ) முதலாகுபெயர் இ) தொழிலாகுபெயர் ஈ) பண்பாகுபெயர்
29. தத்துவம் என்ற சொல்லின் பொருள்
அ) உண்மை ஆ) கருத்து இ)சிறப்பு ஈ) கருணை
30. அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கப்படும் இடம் எது ?
அ) பொற்சாலை ஆ) கூழைக்கடைத்தெரு இ) அக்கசாலை ஈ) காவற்புரைத் தெரு.
கருத்துகள்
கருத்துரையிடுக