TNPSC / TET / POLICE EXAM TAMIL model questions paper # class: 7 first term # 7 ஆம் வகுப்பு முதல் பருவம் தமிழ் # மாதிரி வினாத்தாள்
TNPSC / TET / POLICE / GROUP -4 EXAM
Model exam Tamil Questions Paper
# தமிழ் மாதிரி வினாத்தாள்
தமிழ்
வகுப்பு:7 முதல் பருவம்
காலம்: 30 நிமிடங்கள் மதிப்பெண்கள்:30
1. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்
அ) வேடந்தாங்கல் ஆ) முண்டந்துறை இ) கோடியக்கரை ஈ) கூந்தன்குளம்
2. வாய்மை எனப்படுவது
அ) அன்பாகப் பேசுதல் ஆ) கோபமாகப் பேசுதல் இ) தீங்கு தராத சொற்களைப் பேசுதல் ஈ) பணிவாகப் பேசுதல்
3. போலி எத்தனை வகைப்படும்
அ) 3 ஆ) 4 இ) 5 ஈ) 2
4. கீழ் காண்பவற்றுள் பொருந்தாதது எது?
அ) மேடைப்பேச்சு ஆ) தமிழ் விருந்து இ) ஆற்றங்கரையினிலே ஈ) துறைமுகம்
5. சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி யார்?
அ) குன்ஹா ஆ) பின்ஹே இ) நெரூடா ஈ) ஜார்ஜ்
6.முத்துராமலிங்கத் தேவர் இராமநாதபுரத்தில் படித்துக் கொண்டிருந்த போது எந்த நோய் பரவியதால் அவரின் படிப்பு பாதிக்கப்பட்டது
அ) பிளேக் ஆ) டெங்கு இ) காலரா ஈ) மலேரியா
7.'காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு' என்று அழைக்கப்படும் விலங்கு
அ) யானை ஆ) மான் இ) சிங்கம் ஈ) புலி
8.பொருத்துக.
i) வாரணம் - அ) பாக்கு
ii) பரி - ஆ) அழகு
iii) சிங்காரம் - இ) யானை
iv) கமுகு - ஈ) குதிரை
அ) i- ஈ ii- அ iii- இ iv-ஆ
ஆ) i- இ ii- ஈ iii- ஆ iv-அ
இ) i- ஆ ii- இ iii- ஈ iv-அ
ஈ) i- அ ii- ஆ iii- இ iv-ஈ
9. 'ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே' என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
அ) பதிற்றுப்பத்து ஆ) பரிபாடல் இ) அகநானூறு ஈ) புறநானூறு
10.கூற்று: 1. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் வெ.இராமலிங்கனார்.
கூற்று: 2. என் சரித்திரம் என்ற நூலின் ஆசிரியர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
அ) கூற்று 1,2 சரி ஆ) கூற்று 1 சரி,2 தவறு இ) கூற்று 1,2 தவறு ஈ) கூற்று 1 தவறு, 2 சரி
11. புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவன்
அ) பாரி ஆ) பேகன் இ) குமணன் ஈ ) அதியமான்
12. திருக்குறளின் பொருட்பாலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
அ) 25 ஆ) 72 இ ) 70 ஈ) 38
13.கீழ்காண்பவற்றுள் தவறானது எது?
அ) மொழியின் முதல்நிலை பேசுதல், கேட்டல்.
ஆ) மொழியின் இரண்டாம் நிலை எழுதுதல், படித்தல்.
இ) பேச்சுமொழியை இலக்கிய வழக்கு என்றும், எழுத்துமொழியை உலக வழக்கு என்பர்.
ஈ) தமிழை இரட்டை வழக்கு மொழி என்பர்.
14. மொழியின் உயிர்நாடியாக விளங்குவது எது?
அ) பேச்சுமொழி ஆ) எழுத்துமொழி இ) கிளைமொழி ஈ) வட்டார மொழி
15.பொருத்துக.
i) மூழ்கு - அ) நெடில்தொடர் குற்றியலுகரம்
ii)அரசு - ஆ) உயிர் தொடர் குற்றியலுகரம்
iii) விடு - இ) இடைத்தொடர் குற்றியலுகரம்
iv) வீடு - ஈ) முற்றியலுகரம்
அ) i- ஈ ii- அ iii- இ iv-ஆ
ஆ) i- இ ii- ஆ iii- ஈ iv-அ
இ) i- ஆ ii- இ iii- ஈ iv-அ
ஈ) i- அ ii- ஆ iii- இ iv-ஈ
16.நெடில் எழுத்துகளைக் குறிக்க எந்த எழுத்துச் சாரியைகளைப் பயன்படுத்துகிறோம்.
அ) கரம் ஆ) கான் இ) கேனம் ஈ) காரம்
17.குற்றியலிகரத்தின் மாத்திரை அளவு
அ) இரண்டு ஆ) ஒன்று இ) கால் ஈ) அரை
18. Orthography- கலைச்சொல்
அ) ஒலியியல் ஆ) மொழியியல் இ) எழுத்திலக்கணம் ஈ) சொல்லிலக்கணம்
19.கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார்?
அ) இராசகோபாலன் ஆ) இராஜமார்த்தாண்டன் இ) இராமலிங்கனார் ஈ)வ.உ.சிதம்பரனார்
20.மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு
அ) நாய் ஆ) புலி இ) சிங்கம் ஈ) யானை
21.இந்தியாவின் வனமகன் என்று அழைக்கப்படுபவர்
அ) ஜாதவ்பயேங் ஆ) ஜாதுநாத் இ) கேதவ்பயேங் ஈ) ஸ்ரீபிரசாத்
22.மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் எது?
அ) போன்ம் ஆ) வலம் வந்தான் இ) பாடம் படித்தான் ஈ) மருண்ம்
23. எந்த பெண் யானைக்குத் தந்தம் இல்லை?
அ) ஆசிய ஆ) ஆப்பிரிக்க இ) அமெரிக்க ஈ) ஐரோப்பிய
24.முத்துராமலிங்கத் தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம்
அ) கமுதி ஆ) முதுகுளத்தூர் இ)சாயல்குடி ஈ) இராமநாதபுரம்
25.பிரித்து எழுதுக. காட்டாறு
அ) காடு + ஆறு ஆ) காட்டு + ஆறு இ) காட் + டாறு ஈ) காட் + ஆறு
26.சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும் குறுக்கம்
அ) ஐகாரக் குறுக்கம் ஆ) ஔகாரக்குறுக்கம் இ) மகரக்குறுக்கம் ஈ) ஆய்தக்குறுக்கம்
27.'திரு' என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் எது?
அ) திருப்பாவை ஆ) திருக்குரான் இ) திருவெம்பாவை ஈ) திருக்குறள்கலம்பகம்
28.தொடரை வினை,வினா,பெயர் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடித்து வைப்பது எது?
அ) எழுவாய் ஆ) செயப்படுபொருள் இ) பயனிலை ஈ) பண்புபெயர்
29.பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்
அ) பரணி ஆ) பரிபாடல் இ) அந்தாதி ஈ) கலம்பகம்
30.பொருந்தாதது எது?
அ) இலக்கணப் போலி ஆ ) இடைப்போலி இ) மரூஉ ஈ) இலக்கணமுடையது
கருத்துகள்
கருத்துரையிடுக