தமிழ்-தமிழன்-தமிழ்நாடு - தமிழகம்
47. தமிழ் அறிவோம்!
தமிழ்
தமிழன்
தமிழர்
தமிழ்நாடு
தமிழகம்
உள்ளிட்ட இச்சொற்கள் முதன்முதலில் இடம்பெற்ற இலக்கியங்களைக் காண்போம்.
தமிழ் :
'தமிழ்' என்ற சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல் - தொல்காப்பியம்.
" தமிழ்என் கிளவியும் அதனோர் அற்றே "
(தொல்காப்பியம் - 386)
'தமிழ்மொழி' பேசப்பட்ட நிலத்தை வரையறை செய்துள்ளது தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள சிறப்புப் பாயிரம்.
"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து "
(தொல்காப்பியம் சிறப்புப் பாயிரம் பனம்பாரனார் பாடியது)
தமிழன் :
'தமிழன்' என்ற சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல் தேவாரம்.
"தமிழன் கண்டாய் "
(அப்பர் தேவாரம், திருத்தாண்டகம் - 23)
தமிழர் :
' தமிழர் ' என்ற சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல் - சிலப்பதிகாரம்.
" அருந்தமிழர் ஆற்றல் அறியாது போரிட்ட
கனக விசயரை "
(நீர்ப்படைக்காதை, வஞ்சிக் காண்டம், சிலப்பதிகாரம்)
தமிழ்நாடு :
'தமிழ்நாடு' என்ற சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல் - சிலப்பதிகாரம்.
"இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய "
(வஞ்சிக்காண்டம் - 165. சிலப்பதிகாரம்)
தமிழகம் :
'தமிழகம்' என்ற சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல் - புறநானூறு.
"வையக வரைப்பில் தமிழகம் கேட்ப "
(புறநானூறு - 168)
உலக வரலாற்றில் ஒரு மொழியின் பெயரும், அதைப் பேசிய இனத்தின் பெயரும், அது பேசப்பட்ட இடத்தின் பெயரும் இடம்பெற்ற இலக்கியங்களை ஐயாயிரம் ஆண்டுகளாக (உலகில் எழுத்து வடிவில் முழுவதும் கிடைக்கப்பெற்ற முதல் நூல் தொல்காப்பியம் . இதன் காலம் ஐயாயிரம் ஆண்டுகள்) காப்பாற்றி வரும் ஒரே மொழி தமிழ்மொழி மட்டுமே. அதிக அளவில் இலக்கியங்களை தன்பால் வைத்திருக்கும் ஒரே உலக மொழி தமிழ்மொழி மட்டுமே!
கருத்துகள்
கருத்துரையிடுக