பாரதியார்

TNPSC பொதுத் தமிழ்

பாரதியார் தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

https://youtube.com/@dhiviksha703?si=sqmLI_aI0ijsceL3

 இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

பாரதியார்


பிறப்பு        : 11.12.1882 ; 
இறப்பு       : 11.09.1921

ஊர்           : எட்டயபுரம் (தூத்துக்குடி மாவட்டம்)

பெற்றோர்  : சின்னசாமி -  
                   இலக்குமி  அம்மையார்

மனைவி        : செல்லம்மாள்

இயற்பெயர்    : சுப்பிரமணியம் (எ) 
                               சுப்பையா

பாரதி’ பட்டம் – 11 வயதில் கவிப்புலமையின் காரணமாக ‘எட்டயபுரம் சமஸ்தானம்’ கொடுத்தது.

மொழிப்புலமை  – தமிழ் ,ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காளமொழி,

 வடமொழி பயின்ற கல்லூரி – காசி இந்து கல்லூரி அலகாபாத் பல்கலைக்கழகம் – புகுமுகத் தேர்வில் முதன்மை அரசவைக் கவிஞர் பணி

1902 – எட்டயபுரம் சமஸ்தானம் 

தமிழாசிரியர் பணி
1904 – சேதுபதி உயர்நிலைப்பள்ளி (மதுரை) 

https://youtube.com/@dhiviksha703?si=sqmLI_aI0ijsceL3

வால்ட் விட்மன் – பாரதியின் புதுக்கவிதைக்கு முன்னோடியாக இருந்தவர்.

சிறப்புப் பெயர்

 தேசியக்கவி மகாகவி – வ.ரா. (ராமசாமி ஐயங்கார்)

விடுதலைக்கவி, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி

பாட்டுக்கொரு புலவன் பாரதி – கவிமணி

 நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா –பாரதிதாசன்

புனைப்பெயர்கள்

 காளிதாசன், சக்திதாசன், சாவித்திரி, ஓர் உத்தம தேசாபிமானி நித்திய தீரர்.

பாரதி – புகழுரைகள்

“தமிழால் பாரதி தகுதி பெற்றதும்

தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்” பற்றி என்னென்று சொல்வது – பாரதிதாசன்

“பாரதியை நினைத்திட்டாலும் சுதந்திரத்தின்

ஆவேசம் சுருக்கென்று ஏறும்; இந்தியன் நான் என்றிடும் நல் இறுமாப்பு உண்டாம்” – நாமக்கல் கவிஞர்.

“பாரதியார் ஒரு அவதார புருஷர்  இவர் நூலைத் தமிழர் வேதமாகக் கொள்வார்களாக”.

இயற்றிய நூல்கள்

முப்பெரும் கவிதை பாடல்கள்

1) கண்ணன் பாட்டு

https://youtube.com/@dhiviksha703?si=sqmLI_aI0ijsceL3

2) குயில் பாட்டு

3) பாஞ்சாலி சபதம்

உரைநடை இலக்கியம்

1) ஞானரதம்

2) சந்திரிகையின் கதை

3) தராசு

4) நவதந்திர கதைகள்

சிறுகதைகள்

1) சின்ன சங்கரன் கதை

2) ஆறில் ஒரு பங்கு

3) ஸ்வர்ணகுமாரி கதை

பாடல்கள்

https://youtube.com/@dhiviksha703?si=sqmLI_aI0ijsceL3

1) சுதந்திரப்பாடல்கள் தேசியப்பாடல்கள் தலைவர் வாழ்த்துக்கள்

2) பக்தி பாடல்கள் சமூகப்பாடல்கள்

3) புதிய ஆத்திசூடி பாப்பா பாட்டு

பத்திரிக்கைப்பணி

 1.“விவேக பானூ” – பாரதியின் ‘தனிமை இரக்கம்’ பாடல் முதன் முதலாக இந்நாலேட்டில் வெளிவந்தது.

2.சுதேசமித்திரன் – 1904 – துணையாசிரியராகப் பொறுப்பு – தினசரி இதழ்

ஆசிரியர்பணி

 1.சக்ரவர்த்தினி – 1905 இதழைத்தொடங்கினார் (மாத இதழ்)

2.இந்தியா -1907–வாரப்பத்திரிக்கை

3.பாலபாரதம் – 1908 – ஆங்கில இதழ்

4.விஜயா கர்மயோகி – 1909

5.சூரியோதயம் – 1910

மேற்கோள் பாடல்கள்

“தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம்”

“காக்கை குருவி எங்கள் சாதி – நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்”

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்”

“செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே”

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்.

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.”

“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத்  தொழுது படித்திடடி பாப்பா”

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”

“ஏழை என்றும் அடிமை என்றும் எவரும் இல்லை சாதியில்”

“நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்”

“எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்.”

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு”

https://youtube.com/@dhiviksha703?si=sqmLI_aI0ijsceL3


“காதல் காதல் காதல்

காதல் போயின் காதல் போயின்

சாதல் சாதல் சாதல்”

“செப்புமொழி பதினெட்டு உடையாள் – எனினும் சிந்தனை ஒன்றுடையாள்”

“தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும்”

 “செந்தமிழ் நாடென்னும் போதினிலே”

“சிந்து நதியின் மிசை…….”

 “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்