இடுகைகள்

மார்ச், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிஞர்களின் / தலைவர்களின் சிறப்புப் பெயர்

*தமிழ் அறிஞர்களும் சிறப்பு பெயர்களும்* 1.கவியரசர் -கண்ணதாசன் 2.கவிப்பேரரசு-வைரமுத்து 3.கவிராட்சசர்-ஒட்டக்கூத்தர் 4.கூலவாணிகன்-சீத்தலைச் சாத்தனார் 5.மதுரகவி-பாஸ்கரதாஸ் 6.பாவலரேறு-பெருஞ்சித்திரனார் 7.பண்டிதமணி-கதிரேசஞ் செட்டியார் 8.பன்மொழிப் புலவர்-கா.அப்பாத்துரையார் 9.அழுது அடியடைந்த அன்பர்-மாணிக்கவாசகர் 10.தமிழ் தாத்தா-உ.வே.சாமிநாத அய்யர் 11.கவிச்சக்கரவர்த்தி-கம்பர் 12.தேசிய கவிஞர்-பாரதியார் 13.கவியோகி-சுத்தானந்த பாரதியார் 14.உவமை கவிஞர்-சுரதா 15.பாவேந்தர்-பாரதிதாசன் 16.மக்கள் கவிஞர்-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 17.கவிமணி-தேசிக விநாயகம் பிள்ளை 18.காந்தியக் கவிஞர்-இராமலிங்க பிள்ளை 19.திராவிட சாஸ்திரி-பரிதிமாற் கலைஞர் 20.சொல்லின் செல்வர்-ரா.பி.சேதுப்பிள்ளை 21.மகாவித்துவான்-மீனாட்சி சுந்தரம் பிள்ளை 22.புதுநெறி கண்ட புலவர்-இராமலிங்க வள்ளலார் 23.தமிழக வேர்ட்ஸ்வொர்த்-வாணிதாசன் 24.திரை கவித்திலகம்-மருதகாசி 25.பகுத்தறிவு கவிராயர்-உடுமலை நாராயணகவி 26.நாடக உலகின் இமயமலை-சங்கரதாஸ் சுவாமி 27.தமிழ் நாடக பேராசிரியர்-பரிதிமாற் கலைஞர் 28.தனித்தமிழ் இயக்கத் தந்தை-மறைமலை அடிகள் 29.பெருந்தலைவர்- காமராசர்...

இன்று சில தகவல்கள்

இன்று 🔴🔴 தினம் ஒரு தகவல் 🔴🔴 📍திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ? குறிப்பறிதல் 📍இந்தியாவின் தேசிய மரம் எது ? ஆலமரம் 📍முதல் தமிழ் பத்திரிகை எது ? சிலோன் கெஜட் 📍தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ? சுதேசமித்திரன் 📍தமிழகத்தின் முதல் பெண் கவர்னர் யார்? பாத்திமா பீவி 

தமிழ்-தமிழன்-தமிழ்நாடு - தமிழகம்

47. தமிழ் அறிவோம்! தமிழ்  தமிழன்  தமிழர்  தமிழ்நாடு தமிழகம்  உள்ளிட்ட இச்சொற்கள் முதன்முதலில் இடம்பெற்ற இலக்கியங்களைக் காண்போம். தமிழ் :  'தமிழ்' என்ற சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல் - தொல்காப்பியம். " தமிழ்என் கிளவியும் அதனோர் அற்றே "  (தொல்காப்பியம் - 386)   'தமிழ்மொழி' பேசப்பட்ட நிலத்தை வரையறை செய்துள்ளது தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள சிறப்புப் பாயிரம். "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்  தமிழ்கூறு நல்லுலகத்து "  (தொல்காப்பியம் சிறப்புப் பாயிரம் பனம்பாரனார் பாடியது)  தமிழன் :  'தமிழன்' என்ற சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல் தேவாரம்.   "தமிழன் கண்டாய் "  (அப்பர் தேவாரம், திருத்தாண்டகம் - 23)  தமிழர் : ' தமிழர் ' என்ற சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல் - சிலப்பதிகாரம்.  " அருந்தமிழர் ஆற்றல் அறியாது போரிட்ட  கனக விசயரை "  (நீர்ப்படைக்காதை, வஞ்சிக் காண்டம், சிலப்பதிகாரம்) தமிழ்நாடு :  'தமிழ்நாடு' என்ற சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல் -  சிலப்பதிகாரம்.  "இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய "...

பொது அறிவு GK

*பொது அறிவு*  -------------------------------------- 1. கரும்பு மிக அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் விடை: *கேரளா*  2. வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்? விடை: *அகிலன்*  3. தேசிய ரசாயண பரிசோதனைச்சாலை எங்குள்ளது? விடை: *பாட்னா*  4. உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது? விடை: *மலேசியா*  5. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? விடை: *ஞானபீட விருது*  6. இந்தியாவில் தேயிலை அதிகமாக உற்பத்தியாகும் இடம் எது? விடை: *நீலகிரி*  7. திராவிட வேதத்தை ( திருவாய்மொழி) இயற்றியது யார்? விடை: *நம்மாழ்வார்*  8. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை என்ன? விடை: *38*  9. தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகப்புகழ் பெற்றவர் விடை: *தேவநேயப் பாவாணர்*  10. உடலில் மிகச் சிறிய சுரப்பி எது?        விடை: *கணையம்.*